இப்படியா செய்வாங்க: ஒருவருக்கு கரோனா உறுதியானதால், கொச்சியில் 289 பயணிகளையும் புறப்படும்முன் இறக்கிவிட்ட துபாய் விமானம்

By பிடிஐ

ஒரு பயணிக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது தெரியவந்ததையடுத்து, கொச்சியிலிருந்து புறப்படும் நேரத்தில் விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தி 289 பயணிகளையும் இறக்கிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

கரோனா வைரஸ் பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கரோனா வைரஸால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர் 302 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர், 106 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளைக் கேரள அரசு எடுத்து வருகிறது. இதனிடையே கொச்சி விமானநிலையத்தில் இருந்து இன்று காலை துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் 289 பயணிகள் இருந்தனர். அந்த விமானத்தில் பயணித்த இங்கிலாந்து பயணி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததையடுத்து அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.

இந்த விமானத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த 19 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். இநத 19 பயணிகளும் கடந்த மாதம் கேரளாவுக்கு வந்து பல்வேறு இடங்களைப் பார்வையிட்ட பின் இறுதியாக மூணாறு நகரில் தங்கி இருந்தார்கள். அப்போது அந்த 19 பயணிகளுக்கும் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடந்துள்ளது.

அந்த 19 பயணிகளுக்குமான ரத்தப்பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வந்துள்ளன. அதில் ஒரு பயணிக்கு மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பயணிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயன்றபோது அவர்கள் அனைவரும் கொச்சி நகர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் துபாய் செல்ல இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, உடனடியாக கேரள சுகாராத்துறை அதிகாரிகள் கொச்சி விமானநிலைய அதிகாரிகளைத் தொடர்ந்து அந்த 19 பயணிகளையும் மட்டும் தடுத்து நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால், அந்த 19 பயணிகளும் விமானத்தில் ஏறி விமானம் புறப்படும் தருவாயில் இருந்தது.

இதனால் அவசரமாக விமானத்தில் இருந்த கேப்டனைத் தொடர்பு கொண்ட அந்த 19 பயணிகளை மட்டும் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால், சூழலைப் பார்த்த அதிகாரிகள் 270 பயணிகளையும் இறக்கி அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

இதுகுறித்து கொச்சி விமானநிலையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " முதலில் 19 பயணிகளை மட்டும் இறக்கிவிடத்தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால், 270 பயணிகளும் பாதிக்கப்பட்ட பயணியுடன் கலந்துவிட்டதால், அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் இறக்கிவிடப்பட்டனர்" எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்