கரோனா வைரஸ்: அமிர்தானந்த மயி மடத்தில் பக்தர்கள் வருகை நிறுத்தம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கேரளாவில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்தில் பக்தர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 95,000க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கரோனா வைரஸ் பாதித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 3,291 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோன வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கேரளாவில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்தில் பக்தர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்திற்கு உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் ஏராளமான அளவில் வருகை தருகின்றனர். கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு இந்த முடிவை மாதா அமிர்தானந்த மயி மடம் நடவடிக்கை எடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

1 hour ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்