மோடி கேட்டுக் கொண்டது போலவே டெல்லி மக்கள் தேச விரோதிகளுக்கு வாக்களிக்கவில்லை:பாஜகவை கேலி செய்த மகாராஷ்டிரா அமைச்சர்

By பிடிஐ

மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்ட்ரா அமைச்சருமான நவாப் மாலிக் டெல்லியில் பாஜக தோல்வியை கேலி செய்யும் விதமாகக் கூறிய போது மக்கள் பாஜக தலைவர்கள் கூறியதற்கேற்ப தேசவிரோதிகளுக்கு வாக்களிக்கவில்லை என்றார்.

டெல்லி தேர்தல் வாக்கெண்ணிக்கையில் இன்று அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது, இது பாஜகவுக்கு பெரிய அடி என்று பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் என்சிபி தலைவர் நவாப் மாலிக் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பிரதமர் நரேந்திர மோடியும் பிற பாஜக தலைவர்களும் டெல்லி மக்களிடம் தேச விரோதிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்று முறையிட்டார்கள், மக்கள் அதை அப்படியே கேட்டு ஆம் ஆத்மிக்கு வாக்களித்து விட்டனர்.

பாஜகவின் வெறுப்பு அரசியல் மீது மக்கள் சோர்வடைந்து விட்டனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர், ஆம் ஆத்மி தொண்டர்களை முடக்க ஏகப்பட்ட விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் பாவம் பாஜகவுக்குச் சாதகமாக எதுவும் அங்கு அமையவில்லை.

நாங்களே ஆம் ஆத்மியுடன் டெல்லி தேர்தலில் கூட்டணி வைக்க அவர்களை அணுகினோம், காங்கிரஸ் கட்சியும் கூட எதிர்காலத்தில் வாக்குகள் பிரியாமல் இருக்க கூட்டணியையே யோசிக்க வேண்டும்” என்றார் நவாப் மாலிக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்