யூனியன் பிரதேசமான பின் காஷ்மீரில் முதல் குடியரசு தினம்; மாலை முதல் மீண்டும் இணைய சேவை

By பிடிஐ

காஷ்மீரில், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதன் முதல் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் துணை நிலை ஆளுநர் ஜி.சி. முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். உள்துறைக்கு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட உள்ளது குறித்த தகவல் வந்ததால் பள்ளத்தாக்கில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இந்த ஆண்டு குடியரசு தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் மற்றும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முந்தைய மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில், குடியரசு தினம் முதன்முறையாக கொண்டாடப்படுகிறது.

குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் துணை நிலை ஆளுநர் ஜி.சி. முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்.

ஸ்ரீநகரில் உள்ள ஷெரி காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் முக்கிய விழா நடைபெற்றது, அங்கு லெப்டினன்ட் கவர்னரின் ஆலோசகர் பாரூக் கான் தேசியக் கொடியை ஏற்றினார்.

கான் மைதானத்தில் உரையாற்றினார் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ, மாணவிகள் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கினர்.

ஜம்முவில் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு தேசியக் கொடியை ஏற்றிய பின் ஆற்றிய உரையில் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தின் ஆண்டு. தற்காலிக விதிகளை ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையிலான நிதி மற்றும் சட்டரீதியான தடைகள் தகர்த்தெறியப்பட்டுள்ளன.

இது காஷ்மீரை அதன் உண்மையான அர்த்தத்தில் தேசத்துடன் ஒன்றிணைத்துள்ளது அப்பாவி இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட பாதையில் செல்ல சில தீய சக்திகளால் அறிவுறுத்தப்படுவதால், பயங்கரவாதம் நமது மிகப்பெரிய கவலையாக உள்ளது. இருப்பினும் இங்கு பயங்கரவாதம் தற்போது குறைந்துவிட்டது.

இவ்வாறு துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்தார்.

மாலை 6 மணிக்குப் பிறகு மொபைல் சேவை

ஜம்மு-காஷ்மீரில் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே மொபைல் சேவைகள் மற்றும் இணையதள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

சனிக்கிழமையன்று மீட்டமைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு மொபைல் தரவு சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மொபைல் போன் இணைப்பு நிறுத்தப்பட்டது.

தொலைபேசி அழைப்பு மற்றும் தகவல்பரிமாற்றம் (மெஸேஜ்) , இணைய தள போன்ற சேவைகள் இன்று மாலை 6 மணிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்படும்.

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைமையகங்களும் குடியரசு தின விழாக்கள் நடைபெறுகின்றன.

தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து உளவுத்துறைக்கு ரகசியத் தகவல்கள் வந்துள்ளதால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் காவல் மற்றும் துணை ராணுவப் படைகளை கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரில், கடைகள் மூடப்பட்டிருந்தன, காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி முழுமையாக சோதனை செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்