நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் இருவர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் நால்வரும் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிகிறது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர் படுகாயங்களுடன் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன் மட்டும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம், எஞ்சிய ஐந்து பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

அவர்களுக்கு வழங்கிய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் 2017-ல் உறுதி செய்தது. இந்த வழக்கில் மூன்று குற்றவாளிகளும் 2017-ல் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை 2018 ஜூலை 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரான ராம் சிங், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறுவன், சிறார் நீதி வாரியத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மூன்று ஆண்டு காலத்திற்கு பின்னர் சீர்திருத்த இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மற்ற நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை பிறப்பித்தது. ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் நால்வரும் தூக்கிலிடப்படுவர் என்று கூறியது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரில் வினய் சர்மா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். அவர்களின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் வரும் ஜனவரி 14 அன்று விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர் எஃப் நாரிமன், ஆர்.பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வினய் சர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

இந்த மனுக்களை சேம்பர் அறையிலேயே நீதிபதிகள் விசாரணை செய்தனர். சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்