பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீடு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: யோகி ஆதித்யநாத் உறுதி

By செய்திப்பிரிவு

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பெரும்பாலான மாநிலங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது, தீவைத்துக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக உ.பி. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

‘‘உத்தரப் பிரதேசத்தில் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் பெரிய அளவில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் நடைபெறும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்