புன்னகையுடன் ஒத்துழையாமையைத்தான் முன்மொழிந்தேன்: அருந்ததி ராய் விளக்கம்

By செய்திப்பிரிவு

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்த கருத்துகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அவர் தன் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னோட்டமாக தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் திரட்டப்படும் தகவல்கள் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. எனவே மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்புக்காக வரும்போது உங்கள் பெயர், முகவரிகளை மாற்றிக் கூறுங்கள். உதாரணமாக பெயரைக் கேட்டால், 'ரங்கா-பில்லா' என்று கூறுங்கள். முகவரியை கேட்டால், 'எண் 7, ரேஸ் கோர்ஸ் சாலை, டெல்லி' (பிரதமரின் முகவரி) என்று கூறுங்கள் என்று அருந்ததி ராய் பேசியதையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன.

இதனையடுத்து விளக்கம் அளித்துள்ள அருந்ததி ராய், “என்.ஆர்.சி., மற்றும் தடுப்புக் காவல் முகாம்கள் பற்றி ஆட்சியாளர்கள் பொய்களைக் கூறிவருகிறார்கள், இந்தப் பொய்களுக்கு எதிர்வினையாகத்தான் நான் முட்டாள்தனமான பதில்களை அளியுங்கள் என்று கூறினேன். நான் முன்மொழிவது புன்னகையுடன் கூடிய ஒத்துழையாமையைத்தான்.

என்.ஆர்.சி. குறித்த சர்ச்சை எழுந்ததிலிருந்து பிரதமர் மோடியும் அமித் ஷாவும் முரண்பட்ட கருத்துக்களைக் கூறிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட மோடி மற்றும் அமித் ஷாவோ எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்புவதாக இருதரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

46 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

உலகம்

2 hours ago

மேலும்