‘சிக்னல் கிடைத்தால் போதும் ஒரு மணிநேரத்தில் போராட்டக்காரர்களை ஒழித்து விடுவோம்’- பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சைப் பேச்சு

By பிடிஐ

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு இரண்டையும் எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்களை ஒரு மணி நேரத்தில் அழித்தொழித்து விடுவோம் என்று பேசி ஹரியாணா பாஜக எம்.எல்.ஏ லீலாராம் குர்ஜார் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

தனது தொகுதியான கைதலில் அவர் குடியுரிமை சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஆதரித்துப் பேசினார்.

“இன்றைய இந்தியா ஜவஹர்லால் நேருவுடையதோ, மகாத்மா காந்தியுடையதோ அல்ல, இது நரேந்திர மோடியின் இந்தியா, சிக்னல் வந்தால் போதும் போராட்டம் நடத்துபவர்களை ஒரு மணி நேரத்தில் அழித்தொழித்து விடுவோம்” என்று பேசினார்.

மேலும் இது தொடர்பான அந்த வீடியோவில், “இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல இந்தச் சட்டம், ஆனால் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேறத்தான் வேண்டும்.

இதனால் மக்களுக்கு நான் தெரிவிப்பதெல்லாம் இது மன்மோகன், நேரு, காந்தி கால இந்தியா அல்ல, மோடிஜி, அமித்ஷாஜியினுடையது, எனவே சிக்னல் வந்தால் போதும் ஒரு மணி நேரத்தில் போராட்டக்காரர்களை ஒழித்து விடுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

உலகம்

12 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

22 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

52 mins ago

கல்வி

47 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

மேலும்