லக்னோவில் மூன்று நாள் கண்காட்சிக்காக 60 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம்?

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் இந்திய அளவில் நடைபெற உள்ள மிகப்பெரிய பாதுகாப்புக் கண்காட்சிக்கு தாராளமான இடத்தை வழங்குவதற்காக 60 ஆயிரம் மரங்களை வெட்ட லக்னோ வளர்ச்சி ஆணையம் முடிவு செய்துள்ளது.

லக்னோவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய பாதுகாப்புக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் வருகை தர உள்ளனர்.

லக்னோ பாதுகாப்பு எக்ஸ்போவை நடத்துவது இதுவே முதல் முறையாகும், இதில் நாட்டின் பாதுகாப்பு சக்தியைக் காண பல நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள். எக்ஸ்போ பிப்ரவரி 5 முதல் 8 வரை நடைபெறும், மேலும் பாதுகாப்புப் படை சமீபத்திய வாங்கிய ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படும்.

பாதுகாப்பு கண்காட்சியையொட்டி லக்னோ கோமதி நதிக்கரை அருகே பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இதனால் இப்பொழுதிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகியுள்ளது. நாட்டின் மிகவும் மாசுபட்ட பத்து நகரங்களில் ஒன்றாக லக்னோ பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், கோமதி நதிக்கரை அருகே உள்ள 63,799 மரங்கள் வெட்டப்படவோ அகற்றப்படவோ வேண்டுமென்பதில் அரசு உறுதியாக உள்ளது.

முன்னதாக, நகர் நிகாம், மரங்களை வேறொரு இடத்திற்கு மாற்றலாம் என்றும், நிகழ்வுக்குப் பிறகு ஆற்றின் ஓரத்தில் புதிய தாவரங்களை நடலாம் என்றும் பரிந்துரைத்தது.

இதுகுறித்து லக்னோ வளர்ச்சி ஆணைய செயலாளர் (எல்டிஏ) எம்.பி.சிங் நகர்நிகாமுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது

பாதுகாப்பு கண்காட்சிக்காக ஹனுமான் சேது முதல் நிஷத்கஞ்ச் பாலம் வரையிலான மரங்களை அகற்றவேண்டுமென லக்னோ நகர மேம்பாட்டு ஆணையம் (எல்.டி.ஏ) முடிவெடுக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றியபின், இந்த இடத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

மரங்களை வெட்டுவதோ அகற்றுவதோ விரைவில் முடிவெடுத்து அப்பணியை முடிக்க வேண்டும். அந்த இடத்திலிருந்து வேரோடு அகற்றப்படும் மரங்கள் வேறு இடங்களில் நடப்படும்.

எவ்வகையிலேனும் இப்பணி விரைவில் முடித்தாக வேண்டும். வரும் 2020 ஜனவரி 15 ஆம் தேதிக்குள் இந்த பகுதி முழுவதுமாக அகற்றப்பட வேண்டும் என்றுஎல்.டி.ஏ விரும்புகிறது, அப்போதுதான் நிலத்தை அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க முடியும்.

கண்காட்சி முடிந்ததும் புதிய மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர கோமதி ஆற்றங்கரையில் மரங்களை நடவு செய்ய ரூ 59.06 லட்சம்செலவிடப்பட்டுள்ளது. இதற்கான தொகை ரூ.59 லட்சத்தை நகர் நிகாம் எல்டிஏவுக்கு விரைவில் வழங்க வேண்டும்.

இவ்வாறு லக்னோ வளர்ச்சி ஆணையர் எம்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

வனத்துறை கருத்து

இது தொடர்பாக வனத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த பருவத்தில் மரங்கள் மற்றும் தாவரங்களை இடமாற்றம் செய்வது சாத்தியமில்லை. அப்படி மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் மரங்கள் அழிந்து விடும்.

எனவே மரங்களை வெட்ட வேண்டுமென முடிவெடுக்கும்பட்சத்தில், மரங்களுடன் கூடிய ஆற்றின் பகுதி இயற்கைகை ரசிக்கும் வகையில் அமையக்கூடிய வகையில் அது மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்