பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக:  நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துமாறு நாடாளுமன்றத்தில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக வியாழனன்று நாடாளுமன்றத்தில் விதி 377 இன் கீழ் பேசிய ரவிக்குமார் எம்பி,

“பட்டியலினத்தவரின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமான எண்ணிக்கை கொண்ட பிற்படுத்தப்பட்ட சாதிகள் சிலவற்றை அண்மையில் எஸ்சி பட்டியலில் சேர்த்துள்ளன.

எனவே பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியதன்மூலம் உச்சநீதிமன்றம் நிர்ணயித்திருந்த 50% என்ற உச்சவரம்பை மத்திய அரசு செல்லாததாக்கிவிட்டது.

எனவே பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”

என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

வாழ்வியல்

50 mins ago

உலகம்

48 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்