உலக நோய் தடுப்பு நாள்: மேற்கு வங்கக் குழந்தைகளுக்கு 100 சதவீதம் நோய் தடுப்பு; மம்தா பெருமிதம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா,

மேற்கு வங்கக் குழந்தைகளுக்கு 100 சதவீதம் நோய் தடுப்பு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உலக நோய் தடுப்பு நாளை முன்னிட்டு இன்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய கடுமையான நோய்களுக்கு எதிராக, சரியான நேரத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக நோய் தடுப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் கிட்டத்தட்ட நூறு சதவீத குழந்தைகளுக்கு நோய் தடுப்பு செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இன்று உலக நோய் தடுப்பு நாள். தடுப்பூசிகளையே செயலிழக்க வைக்கும் கடும் நோய்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். உரிய நேரத்தில் தடுப்பூசிகளைச் செலுத்தி நோய் தடுப்பு செய்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக மிக அவசியம் ஆகும்.

மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 100 சதவீதமான குழந்தைகள் நோய் தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்'' என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

வலைஞர் பக்கம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்