அயோத்தி தீர்ப்பு: அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்ற ஒரே முஸ்லிம் நீதிபதி: முக்கிய வழக்குகளில் அளித்த தீர்ப்பு என்ன? 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

அயோத்தி நில விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அப்துல் நசீர் எனும் முஸ்லிம் நீதிபதி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கியது.

இந்த அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தவிர்த்து நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 4 நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர். இதில் ஒரே ஒரு முஸ்லிம் நீதிபதி அப்துல் நசீர் மட்டுமே.

நீதிபதி அப்துல் நசீர் சிறுபான்மையினர் தொடர்பான இந்த வழக்கில் மட்டுமல்ல, முத்தலாக் வழக்கத்தை தடை செய்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலும் இடம் பெற்றிருந்தார். அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி அப்துல் நசீர் மைனாரிட்டி தீர்ப்பு வழங்கினார்.

அதாவது 1400 ஆண்டு காலம் பின்பற்றப்பட்டு வந்து முத்தலாக்கைத் தடை செய்து 3 நீதிபதிகள் ஆதரவாகவும், 2 நீதிபதிகள் மாறாகவும் தீர்ப்பளித்தனர். அந்த 2 நீதிபதிகளில் அப்துல் நசீரும் ஒருவர்

அயோத்தி வழக்கில் 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடி முஸ்லிம் அமைப்புகள் செய்த வாதங்கள் அனைத்தையும் 5 நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி அப்துல் நசீர் ஏற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் நீதிபதி அப்துல் நசீர் நியமிக்கப்படும் முன் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்தார். அதாவது கடந்த 1994-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பான மசூதி இஸ்லாம் மதத்தின் ஒருபகுதி அல்ல என்று வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது.

அதில் அசோக் பூஷணுடன் சேர்ந்து, அப்துல் நசீரும் இடம் பெற்றிருந்தார். ஆனால், இந்த வழக்கை அதிகமான நீதிபதிகள் இடம் பெற்றுள்ள அமர்வுக்கு மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து 2 நீதிபதிகளும், ஒருவர் ஆதரவுத் தீர்ப்பும் வழங்கினர்.

அயோத்தி வழக்கு விசாரிக்க தலைமை நீதிபதி முதலில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தார். இந்த அமர்வில் தொடக்கத்தில் நீதிபதி அப்துல் நசீர், அசோக் பூஷண் ஆகியோர் இடம் பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக நீதிபதிகள் என்.வி.ரமணா, யு.யு.லலித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால், அரசியல்ரீதியாகவும், மதரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் வழக்கில் இருந்து ரமணா, லலித் ஆகியோர் விலகிக் கொண்டனர்.

இதையடுத்து, இரு நீதிபதிகளுக்குப் பதிலாக அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய இரு நீதிபதிகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமித்தார்.

இந்த வழக்கில் மட்டுமல்லாது, கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமையின் கீழ்வரும் என்று 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அந்த 9 நீதிபதிகளில் அப்துல் நசீரும் ஒருவர்.

தற்போது 61 வயதாகும் அப்துல் நசீர் கடந்த 1983-ம் ஆண்டு வழக்கறிஞராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து கூடுதல் நீதிபதியாக கடந்த 2003, மே 12-ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன்பின் 2004-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். அதன்பின் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்