அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: தீர்ப்பளிக்கப்போகும் 5 நீதிபதிகள் யார்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் அயோத்தி வழக்கில் இன்று காலை 10;30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கும் தீர்ப்பு மிக முக்கியமானதாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்சினையில் மிக முக்கிய தீர்ப்பை இந்த நீதிபதிகள் இன்று வழங்கவுள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்: இந்த அரசியல் சாசன அமர்வு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ரபேல் விவகாரம், அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை அவர் வழங்கிய அமர்வில் கோகோய் இருந்துள்ளார்.

(நீதிபதி போப்டே- கோப்புப் படம்)

நீதிபதி போப்டே: நீதிபதி போப்டே ரஞ்சன் கோகோய்க்கு பின்னர் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர் 21 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

நீதிபதி சந்தரசூட்: பல்வேறு வழக்குகளில் அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள சந்தரசூட், மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை தொடர்பாக பல்வேறு தீர்ப்புகளை வழங்கியவர்.

நீதிபதி அசோக் பூஷண்: அலகபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் கற்ற அசோக் பூஷண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். நீதிமன்ற ஆணையத்தின் தலைவர் பதவி உள்ளிட்ட மிக முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

நீதிபதி அப்துல் நசிர்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி அப்துல் நசிர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். பின்னர் 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்