நாட்டில் பசுக்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரிப்பு: சென்சஸ் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி,

2012-ல் இருந்த பசுக்களின் எண்ணிகையை விட தற்போது பசுக்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக சென்சஸ் தகவல் தெரிவிக்கிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி பசுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. 20-வது கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கால்நடைகள், எருமைகள், காட்டெருமைகள், காட்டெருதுகள், செம்மறி ஆடுகள், ஆடுகள், பன்றிகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், நாய்கள், முயல்கள் மற்றும் யானைகள், மற்றும் கோழிகள், வாத்துகள், ஈமுக்கள், வான்கோழிகள், காடைகள் மற்றும் பிற கோழிகள் ஆகியவை கணக்கிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''2019 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 192.49 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மாடுகளின் எண்ணிக்கை மட்டும் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளை 2012 ஐ ஒப்பிடும்போது 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் பசுக்களின் தொகை 145.12 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பை விட (2012) 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

பசுக்கள் மற்றும் எருமைகள் உட்பட மொத்த பால் வழங்கும் கால்நடைகள் 125.34 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய அரசின் கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

இந்தியா

41 mins ago

வர்த்தக உலகம்

49 mins ago

ஆன்மிகம்

7 mins ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்