உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

By செய்திப்பிரிவு

புவனேஷ்வர்,

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்கிறார்கள். இந்து கலாச்சாரத்துக்கு நன்றிகள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஒடிசா புவனேஸ்வரில் அறிவுஜீவிகள் சந்திப்பில் மோகன் பாகவத் கூறும்போது, இந்து என்பது மதமும் அல்ல மொழியும் அல்ல. ஒரு நாட்டின் பெயரும் அல்ல. இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பினர் வாழ்வதும் இந்துப் பண்பாடாகும். இந்துப் பண்பாடு பன்முகத்தன்மையை ஏற்று மதிக்கக்கூடியது. எந்த ஒரு தேசமும் சரியான வழியிலிருந்து திசைமாறும்போது உண்மையைத் தேடி நம்மிடமே வருகின்றனர்.

“யூதர்கள் தேசமின்றி அலைந்த போது இந்தியா என்ற நாட்டில்தான் அவர்களுக்கு முழு அடைக்கலம் கொடுக்கப்பட்டது. பார்சிக்கள் தங்கள் மதத்தினை இந்தியாவில்தான் சுதந்திரமாக நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்க முடிகிறது. மகிழ்ச்சிகரமான முஸ்லிம்கள் இந்தியாவிதான் இருக்கின்றனர். இது ஏன் என்றால் நாமெல்லாம் இந்துக்கள்.

இது நம் இந்து ராஷ்ட்ரம், இந்தியாவில் பலரும் தங்கள் இந்து அடையாளத்தை வெளிப்படையாக ஓப்புக் கொள்வதில் வெட்கப்படுகின்றனர். ஆனாலும் சிலர் இந்துவாக இருப்பதில் பெருமைப் படுவதாக தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் இந்துக்கள் என்று தங்களை உணர்கின்றனர், ஆனால் தொடர்ச்சியாக இந்து இந்து என்று கூறுவதில் எரிச்சலடைகின்றனர். இன்னும் சிலர் தங்கள் இந்து அடையாளம் குறித்து எச்சரிக்கையாக இருக்கின்றனர். இவர்களிடம் ரகசியமாகக் கேட்டால், தனிப்பட்ட முறையில் கேட்டால் ஆம் நாங்கள் இந்துக்களே என்பார்கள். வெளிப்படையாக கூற முடியவில்லை ஏனெனில் அவர்களது நலன்கள் பாதிக்கப்படும் என்று கருதுகின்றனர்” இவ்வாறு கூறினார் மோகஹ் பாகவத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்