சாரதா வழக்கு: ராஜீவ் குமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை- டெல்லி திரும்பிய சிறப்பு சிபிஐ தனிப்படை

By செய்திப்பிரிவு

கொல்கத்தா, பிடிஐ

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரைக் கண்டுபிடிக்க 10 பேர் கொண்ட சிபிஐ தனிப்படை அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் டெல்லி திரும்பியது.

கொல்கத்தாவுக்கு செப்.17ம் தேதி வந்த சிறப்பு சிபிஐ தனிப்படை கொல்கத்தா முழுதும் சல்லடைப் போட்டு தேடிப்பார்த்தனர். ஆனால் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் டெல்லிக்கு திரும்பினர்.

இந்த மாதத் தொடக்கத்தில் ராஜீவ் குமாரைக் கைது செய்வதற்கு விதித்திருந்த தடையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் விலக்கிக் கொண்டதையடுத்து அவரை சிபிஐ தேடி வருகிறது.

சாராத ஊழல் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததாக ராஜீவ் குமார் மீது வழக்குப் பதிவாகியுள்ளது, ராஜீவ் குமாரின் ஜாமீன் முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் தலமறைவாகியுள்ளார்.

கடந்த வாரம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கைதுக்கு முந்தைய ஜாமின் கேட்டு அவர் மனு செய்திருந்தார், அது விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சிபிஐ தனிப்படை அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து டெல்லி திரும்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

30 mins ago

கருத்துப் பேழை

23 mins ago

கருத்துப் பேழை

31 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்