சூப்பர் எமர்ஜென்ஸியில் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: மம்தா பானர்ஜி கருத்து

By செய்திப்பிரிவு

கொல்கத்தா,

நாடு சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரத்தையும், உரிமையையும் காக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்

கடந்த 2007-ம் ஆண்டு ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஜனநாயக மாண்புகளை போற்றும் வகையில், இன்று சர்வதேச ஜனநாயக நாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், சுதந்திர இந்தியாவில் மக்களுக்கு அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையும்,சுதந்திரத்தையும் காக்க வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் இன்று வெளிட்ட அறிவிப்பில், " இன்று சர்வதேச ஜனநாயக நாள். நம்முடைய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை, மதிப்புகளை பாதுகாக்க நாம் மீண்டும் உறுதிஏற்க வேண்டும்.

நாடு சூப்பர் எம்ர்ஜென்ஸியைநோக்கி நகர்ந்து வருகிறது. ஆதலால், அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகள், சுதந்திரத்தை நாம் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துவரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நாடு சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி நகர்ந்துவருகிறது என்று விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்