சமூகவலைதள கணக்குகளுடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசின் திட்டம் குறித்து தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி
சமூகவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுடன் ஆதார் எண் உள்ளி்ட்ட சுயவிவர குறிப்புகளை இணைக்கக் கோரி சென்னை, மும்பை மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி பேஸ்புக்நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேபோல இதுதொடர்பாக பிற உயர் நீதிமன்றகங்ளில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கும் தடை கோரியது.

இந்த வழக்கில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் தங்கள் தரப்பு வாதங்களை ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இந்தநிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சமூகவலைதளங்களை வரன்முறை படுத்துவது தொடர்பாகவும், சமூகவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாகவும் ஏதேனும கொள்கை முடிவு உள்ளதா, திட்டம் இருக்கிறதா என்பது குறித்து செப்டம்பர் 24-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

12 hours ago

மேலும்