ஆன்லைன் மூலம் பசுக்களை தத்தெடுக்கும் திட்டம்: ம.பி. அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

போபால்
ஆன்லைன் மூலம் பசுக்களை தத்தெடுக்கும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரசேதத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பசு பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாநிலம் முழுவதும் சுற்றித் திரியும் பசுமாடுகளை பாதுகாப்பதற்காக கோசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோசாலைகளில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வழங்குவதற்காக சிறப்பு திட்டம் ஒன்றையும் மத்திய பிரதேச அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பசுகளை ஆன்லைன் மூலம் தத்துக்கொடுக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பசுகள் கோசாலையிலேயே பராமரிக்கப்படும். அந்த பசுகளுக்கு தீவனத்தை ஒருவர் விரும்பினால் வழங்கலாம். இதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைன் மூலமே பசுக்களை தத்தெடுக்கும் நடைமுறையை மேற்கொள்ளலாம்.

15 நாட்களுக்கு ஒரு பசுவுக்கு தீவனம் வழங்க ரூ. 1,100 செலுத்த வேண்டும். ஒருவர் ஒரு மாட்டை தத்தெடுத்தால் ஆறு மாதங்களுக்கு ரூ. 11,100 செலுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒரு மாட்டை பராமரிக்க 3 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநில கால்நடை வளர்ச்சித்துறை கூறுகையில் ‘‘மாநிலம் முழுவதும் மொத்தம் 626 கோசாலைகள் உள்ளன. இந்த கோசாலைகளில் உள்ள ஒரு பசுவுக்கு 5 கிலோ பசுந்தீவனமும், 10 கிலோ உலர் தீவனமும் வழங்க வேண்டும்.

இதற்கு அதிகமான தொகை தேவைப்படும் என்பதால் நிதியுதவி செய்பவர்களை தேடி வருகிறோம். நன்கொடை வழங்குபவர்கள் எங்களை அணுகலாம்’’ எனக் கூறியுள்ளார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

38 mins ago

வாழ்வியல்

29 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்