‘‘நீங்கள் தான் உண்மையான இரும்பு மனிதர்’’ - அமித் ஷாவுக்கு முகேஷ் அம்பானி புகழாரம்

By செய்திப்பிரிவு

காந்திநகர்

நீங்கள் தான் இந்தியாவின் உண்மையான இரும்பு மனிதர் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி புகழ்ந்தார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

அமித் ஷா அவர்களே நீங்கள் தான் உண்மையான கர்மயோகி. இந்த நாட்டின் உண்மையான இரும்பு மனிதர். குஜராத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே உங்களை போன்ற தலைவரை பெற்றது பெருமை.

உங்களின் கைகளில் இந்தியா பாதுகாப்புடன் உள்ளது. உங்கள் இலக்கை எந்த தடையும் தாக்குவதில்லை. அதுபோலவே மிகப்பெரிய கனவுகளை காண்பதற்கு நீங்கள் தயங்குவதில்லை. உங்கள் எண்ணங்கள் மற்றும் கனவுளால் இந்தியாவில் நாளை புதிய வாய்ப்புகள் தோன்றும் என நம்புகிறோம்’’ என பேசினார்.

விழாவில் அமித் ஷா பேசுகையில் இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை பொருளாதாரத்தை காக்க பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியா இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளது’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 secs ago

இந்தியா

40 mins ago

வர்த்தக உலகம்

48 mins ago

ஆன்மிகம்

6 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்