அரசு உதவியை மறுத்த நிருபரின் குடும்பம்: நேர்மையான விசாரணை நடத்த வலியுறுத்தல்

By பிடிஐ

‘வியாபம்’ தொடர்பான செய்தி யைச் சேகரித்துக் கொண்டிருக் கும்போது மர்மமான முறையில் உயிரிழந்த தொலைக்காட்சி செய்தியாளரின் குடும்பம், அரசின் உதவியை வேண்டாம் என மறுத்துள்ளது.

வியாபம் வழக்கில் தொடர் புடைய மருத்துவ மாணவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்டார். அவர்களின் பெற்றோரைப் பேட்டியெடுத்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர் அக் ஷய் சிங், பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போதே வாயில் நுரைதள்ளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அக் ஷய் சிங்கின் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் கூறும்போது, “பெரிய இழப் பைச் சந்தித்துள்ள இக்குடும்பத் தினரைச் சந்தித்தேன். இக்குடும் பத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்வதாகவும், அவரின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப் படும் எனவும் உறுதி கூறியுள்ளேன். உண்மை வெளிவர வேண்டும் என விரும்புகிறேன். அக் ஷய் சிங்கின் உடல் உறுப்புகளை மறு தடயவியல் பரிசோத னைக்கு உட்படுத்துவதற் காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் துள்ளோம்” என்றார்.

சுமார் அரைமணி நேரம் அக் குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மேலும் கூறும்போது, “டெல்லியிலுள்ள மத்தியப்பிரதேச பவனில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் தயார். எந்தவகையான பணி என்பதை அவர்களின் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன்.

செய்தியாளரின் தாய் அல்லது சகோதரி அது தொடர்பாக முடிவு செய்யலாம். அவர்களின் வலியைக் குறைப் பதற்காக எவ்வித உதவியையும் செய்யத் தயார்” என்றார்.

நிருபரின் குடும்பம் மறுப்பு

இதுதொடர்பாக அக் ஷய் சிங்கின் சகோதரி கூறும்போது, “அரசிடமிருந்து அனைத்து உதவி களையும் அளிப்பதாக முதல்வர் உறுதியளித்தார். நிதியுதவி மட்டு மின்றி அரசு வேலை அளிப்பதா கவும் உறுதியளித்தார்.

முதல்வர் எங்கள் வீட்டுக்கு வந்தார். தனது இரங்கலைத் தெரிவித்தார். ஆனால் அவரும் ஓர் அரசியல்வாதிதான். அவரின் செயல்பாட்டைப் பொறுத்தே அவரை நாங்கள் மதிப்பிட முடியும்” என்றார். அக் ஷயின் தாய் கூறும்போது, “எங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அக் ஷய் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார்.

திடீரென மர்மமாக இறந்து விட்டார். எங்களுக்கு உதவி எதுவும் தேவையில்லை. ஆனால், என் மகனின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப் பட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்