மத்திய அரசின் அடுத்த திட்டம் ‘ஃபிட் இந்தியா’- டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு


புதுடெல்லி
பிரதமர் மோடி, இன்று 'ஃபிட் இந்தியா' திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முதன்முறையாக 2014-ம் ஆண்டு பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தூாய்மை இந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என பல திட்டங்கள் அடுத்தடுத்த அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் உடல் வலிமையை பேணும் வகையில் ‘ஃபிட் இந்தியா’ என்ற திட்டத்தை, பிரதமர் மோடி, இன்று தொடங்கி வைத்தார். தேசிய விளையாட்டு தினமான இன்று டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் விழா நடைபெறுகிறது.
ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் நலத்தை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு இந்தியரும் ஃபிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நோயற்ற இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து வரும் அரசு அதற்கு உதவி புரியும் வகையில் ‘ஃபிட் இந்தியா’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரபல விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளான பி.வி.சிந்து, ஹிமாதாஸ், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் ‘ஃபிட் இந்தியா’ முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

ஜோதிடம்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்