பாலைவன மாவட்டங்களில் வீடுகளுக்கு ஒவ்வொருநாளும் 70 லிட்டர் குடிநீர் சப்ளை: ராஜஸ்தான் முதல்வர் அதிரடி

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் உள்ள 13 பாலைவன மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் ஒவ்வொருநாளும் 70 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் அசோக் கெலோட் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராஜஸ்தானில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் பாலைவன 13 மாவட்டங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது.

மாநில மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக குடிநீர் கட்டணத்தை திருத்துவதற்கான நிதித் துறையின் திட்டத்திற்கு மாநில முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதில் முக்கியமாக, மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிநபர்களுக்கும் 40 லிட்டர் இலவச தண்ணீரை வழங்க மாநில அரசு முன்பு ஒப்புதல் அளித்திருந்தது, ஆனால் பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 30 லிட்டர் கூடுதலாக தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத் தொடக்கத்தில், ராஜஸ்தானின் பாலி நகரில் ஏற்பட்ட கடுமையான நீர் பற்றாக்குறையைப் போக்க
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் ரயில் ஜோத்பூர் ரயில் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

23 mins ago

உலகம்

21 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

34 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்