டெல்லியில் அபாய அளவை மீறி அதிகரிக்கும் வெள்ளநீர்: ரயில்போக்குவரத்து நிறுத்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

டெல்லியில் நேற்றுமுன்தினம் அபாய நிலையை எட்டியிருந்த யமுனா நதியின் வெள்ளம் மேலும் மேலும் அதிகரித்து வருவதால் பழைய யமுனா பாலம் எனப்படும் டெல்லியின் ரயில் போக்குவரத்துப் பாலம் மூடப்பட்டது.

ஹரியானாவில் கடும் மழை காரணமாக அங்குள்ள தடுப்பணைகள் திறந்துவிடப்படும் நிலை ஏற்பட்டடது. இதனால் யமுனையில் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

யமுனா நதியின் நீர்மட்டம் திங்களன்று 205.33 மீட்டர் அபாய அடையாளத்தை மீறியது.

இதைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சமவெளிகளில் வசிக்கும் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு அரசு நிறுவனங்களால் அமைக்கப்பட்ட 2,300 கூடாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெள்ளத்துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

பாலத்தில் ரயில் போக்குவரத்து குறித்து நிறுத்தம் வடக்கு ரெயில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''வெள்ளநீரின் அளவு உயர்ந்து கொண்டிருந்ததைக் கருத்தில் கொண்டு நேற்று இரவு பழைய யமுனா பாலம் (லோஹெவாலா புல்) மீதான ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்படடது. ரயில்பாலம் மூடப்பட்ட நிலையில் பாலத்தை நோக்கி வந்துகொண்டிருந்த பல ரயில்கள் தங்கள் இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

39 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்