ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது (2007), நிதியமைச் சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்ட ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் அவரை கைது செய்ய தடை விதித்தது. பின்னர் இந்தத் தடையை நீதிமன்றம் அவ்வப்போது நீட்டித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ப.சிதம்பரத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என வாதிட்டனர்.

இதனையடுத்து சிதம்பரத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதேசமயம் மேல்முறையீடு செய்வதற்காக சிதம்பரத்துக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

56 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்