அனைத்து இந்திய மொழிகளும் வளர்ச்சியடைய ஊக்கம் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் தேசிய
கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிட மிருந்தும் கருத்துகள் கோரப்பட்டிருந்தன.

மேலும், இதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. புதிய கல்வி கொள்கையின்படி மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் இது தொடர்பான போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறும்போது, “மத்திய அரசு எந்த மொழிக்கும், எந்த மாநிலத்திலும் தடை விதிக்கவில்லை. 22 இந்திய மொழிகளும் வளர்ச்சி பெறுவதற்கு ஊக்கம் அளிக்கவே மத்திய அரசு முயன்று வருகிறது. அதே நேரத்தில் ஆங்கில மொழிக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைத்து மொழிகளும் வளர்ச்சி அடையவும், வலுவடையவுமே மத்திய அரசு விரும்புகிறது.

அதற்கான பணிகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆங்கிலம் இந்திய மொழியாக இல்லாத போதிலும், அந்த மொழிக்கு தடை விதிக்கவில்லை. அந்த மொழியும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்-அப் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மத்திய அரசு அதிகரித்து வருகிறது” என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்