பாகிஸ்தான் பங்குச் சந்தையில் தாவூத் இப்ராகிம் முதலீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் உலகம் முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பங்குச் சந்தையில் அவர் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு உட்பட இந்தியாவில் பல்வேறு தீவிர வாதச் செயல்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். இவர் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளார். இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. பல்வேறு தீவிர வாதச் செயல்களின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள தாவூத்தின் சொத்துக்கள் முடக் கப்பட்டுள்ளன. எனினும், போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், கள்ள நோட்டு, பணம் பறித்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் மூலம் தாவூத் கும்பலுக்கு தொடர்ந்து பணம் வருகிறது.

தாவூத்தின் சொத்துக்கள் உலகம் முழுவதும் முடக்கப் பட்டுள்ள நிலையில்,சட்ட விரோதச் செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தை தாவூத் இப்ராகிம், பாகிஸ்தான் பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக தெரியவந்துள்ளது. தாவூத்தின் நெருங்கிய கூட்டாளி யான ஜாபிர் மோதி என்பவர் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பாகிஸ்தானில் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் 2016-ல் இணைக்கப்பட்டவை. இந்த நிறுவனங்கள் மூலம் தாவூத் இப்ராகிம் சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை பாகிஸ்தான் பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக இந்திய புலனாய்வு நிறுவனங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டுக்களுக்காக தாவூத் தின் கூட்டாளி ஜாபிர் மோதி, இப்போது லண்டன் சிறையில் உள்ளார். இந்தியாவிலும் அவர் மீது மோசடி, கடத்தல் குற்றச் சாட்டுக்கள் உள்ளன. அவரை இந்தியா கொண்டு வருவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்