ஆப்கான் இந்திய துணை தூதரக தாக்குதல்: நாடெங்கும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று காலை இந்திய துணைத் தூதரகம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் அனைத்துப் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீராட் நகரில் இந்திய துணைத் தூதரக அலுவலகம் இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 3.25 மணி அளவில் 4 தீவிரவாதிகள் தூதரக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்த இந்திய திபெத்திய எல்லை படையினர் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், ஆப்கனில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா வரும் மே 26ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, ஜம்மு காஷ்மீர் மற்றும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்