நாடாளுமன்ற குழு அறிக்கை வரும் வரை நில அவசர சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

By பிடிஐ

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை 3-வது முறையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பிரோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நிலம் கையகப்படுத்தும் மசோதா, தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. அந்தக் குழு தனது அறிக்கையை அளிப்பதற்கு முன்னர், 3-வது முறையாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டிய அவசரம் என்ன? நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை அளிக்கும் வரை, அவசர சட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா தனக்கு வாழ்வா சாவா போராட்டம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அப்படி என்றால், அவசர சட்டத்தை கொண்டு வருவது ஏன்?

இவ்வாறு மார்க்சிஸ்ட் அறிக்கையில் கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா வெளியிட்ட அறிக்கையில், ‘‘மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு உண்மையாக இல்லை. இந்த நாட்டு மக்களுக்கும் உண்மையாக இல்லை. அவசர சட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏற்கெனவே மசோதா கூட்டுக் குழு ஆய்வில் இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்