சுஷ்மா ஸ்வராஜை தொந்தரவு செய்யாதீர்: லாலு ஆதரவு

By பிடிஐ



வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெண்ணாக இருப்பதனால், அவருக்கு லலித் மோடி விசா விவகாரத்தில் தொந்தரவு அளிக்க வேண்டாம் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பரிந்துரை செய்ததாக விவரிக்கும் இ-மெயில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

லலித் மோடிக்கு உதவியது மனிதாபிமான அடிப்படையில்தான் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்திருப்பதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறிம்போது, "சுஷ்மா ஸ்வராஜ் ஒரு பெண். இந்த விஷயத்தில் அவருக்கு தொந்தரவு அளிக்க நான் விரும்பவில்லை. அரசியல் கட்சிகளும் எல்லை மீறி அவருக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

2 mins ago

தமிழகம்

12 mins ago

இணைப்பிதழ்கள்

29 mins ago

இணைப்பிதழ்கள்

40 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்