காங்கிரஸுடன் கூட்டணி முயற்சி: ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஜேட்லி கண்டனம்

By ஆர்.ஷபிமுன்னா

ஒருபுறம் பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முழு அடைப்புப் போராட்டம் நடத்தும் ஐக்கிய ஜனதாதளம், மறுபுறம் அதற்குத் துரோகம் விளைவித்த காங்கிர ஸுடன் கூட்டுசேர முயல்கிறது என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

ஜார்க்கண்ட் மாநிலம் பிஹாரி லிருந்து பிரிந்த பிறகு இயற்கை வளங்கள் அனைத்தும் அந்த மாநிலத்துக்கு சென்றுவிட்டன. எனவே, பிஹார் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இப்பிரச்சினையில் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இக்கோரிக்கையைப் பரிசீலிப்ப தாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் தூது விட்டுக் கொண் டிருந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட் டிலும் நிதியமைச்சர் இது தொடர்பாகப் பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.

ஆனால் அது பிஹாரின் பொரு ளாதாரத் தேவையை விட, காங்கி ரஸின் அரசியல் தேவையாகத்தான் இருந்தது.

இந்த வலையில் ஐக்கிய ஜனதாதளம் எப்படி விழுந்தது எனத் தெரியவில்லை. ஐக்கிய ஜனதா- பா.ஜ.க. உறவு முறிந்த நிலையில்தான் இந்த உத்தரவாதம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தின் உறவு கிடைத்தபோது, ஐக்கிய ஜனதாவை காங்கிரஸ் கைவிட்டது.

தற்போது, ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் காங்கிரஸின் கவனம் ஐக்கிய ஜனதாவின் பக்கம் திரும்பி யுள்ளது. பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்துக்கு அளிக்காமல் துரோ கம் விளைவித்த காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஐக்கிய ஜனதா தளம் முனைகிறது. இவ்வாறு ஜேட்லி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

36 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்