எங்கள் உத்தரவை உயர் நீதிமன்றங்களே பின்பற்றாவிட்டால் யார் பின்பற்றுவார்கள்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

‘நாங்கள் பிறப்பிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றங்களே பின் பற்றாவிட்டால், பொதுமக்கள் எப்படி பின்பற்றுவர்’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 3 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இவற்றை விசாரித்து முடிக்க, நீதிபதிகளின் காலிப் பணியிடங் களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தர விட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா வாதிட்டபோது, ‘கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 17 மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்கு தேர்வு நடந்தது. ஐந்து பேரை தேர்வு செய்ய இரண்டரை ஆண்டு ஆனது. அவர்களுக்கும் இன்னும் பணி நியமனம் வழங்கப் படவில்லை’ என்றார்.

நீதிபதிகள் கோபம்

இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், வழக்குகள் தேக்கமடை வதைத் தடுக்க துரிதமாக செயல் படும்படி உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டால், இப்படி நத்தை வேகத்தில் செயல்பட்டால் என்ன செய்வது? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றங்களே மதிக்காவிட்டால், பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்? இந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்த ரவை சாதாரண மக்கள் எப்படி மதிப்பார்கள்? கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை. எனவே, இனியும் தாமதிக் காமல் உடனே காலியிடங்களை நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால், உயர் நீதிமன்றத்தின் பதிவாளரை நீக்க வேண்டும்.

காலியிடங்களை நிரப்ப அனைத்து உயர் நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளிடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், நாங்கள் அதிகாரிகள் மீது நீதித்துறை அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க வேண்டியது வரும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

விளையாட்டு

58 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்