கடந்த நிதி ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3%

By செய்திப்பிரிவு

கடந்த நிதி ஆண்டின் (2014-15) வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக உள்ளது என்று மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித்திருக்கிறது. பெரும்பாலான வல்லுநர்கள் 7.4 சதவீத அளவுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் வளர்ச்சி சிறிதளவு குறைந்திருக்கிறது.

2013-14-ம் நிதி ஆண்டில் பொருளாதாரம் 6.9 சதவீத வளர்ச்சியும் அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 5.1 சதவீத வளர்ச்சியும் அடைந்திருந்தது. ஜனவரி மார்ச் மாத காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக உள்ளது. இதே காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2011-12-ம் ஆண்டினை அடிப்படையாக கொண்டு ஜிடிபி கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டில் விவசாயத்துறையின் வளர்ச்சி 0.2 சதவீதமாகவும், உற்பத்தி துறையின் வளர்ச்சி 7.1 சதவீதமாகவும், நிதிசேவைகள் பிரிவின் வளர்ச்சி 11.5 சதவீதமாகவும் இருந்தது.

ஜிடிபி தகவல்கள் 2011-12-ம் ஆண்டினை அடிப்படையாக கொண்டது. இருந்தாலும் பெரும்பாலான நிபுணர்களும், சர்வதேச நிறுவனங்களும் ஜிடிபி தகவல்கள் உண்மை நிலையை பிரதிபலிக்க வில்லை என்றே விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

1 min ago

இந்தியா

25 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

27 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்