பச்சோரி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

பாலியல் வன்கொடுமைப் புகாரை எதிர்கொண்டு வரும் ‘தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (டெரி)' அமைப்பின் இயக்குநர் ஆர்.கே.பச்சோரிக்கு, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் கிரீஸ் நாட்டின் தலைநகரம் ஏதென்ஸில் ‘உலகளாவிய நீர் உச்சிமாநாடு' நடைபெற உள்ளது. அதில் தான் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி பச்சோரி கடந்த வாரம் டெல்லி உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை விசாரித்த நீதிபதி எஸ்.பி.கார்க், ‘அந்த மாநாட்டில் பச்சோரி கலந்துகொள்வது கட்டாயமானது அல்ல என்பதால் அவர் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க முடியாது' என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பச்சோரி தனது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

வணிகம்

35 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்