சைபர் குற்றங்களைத் தடுக்க மாணவர்கள் பேஸ்புக் பயன்படுத்தத் தடை: பெங்களூருவில் தனியார் பள்ளிகள் புதிய கட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

இந்திய நகர்ப்புறங்களில் பதின் பருவத்தினர் செல்போன், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளை கணிசமாக பயன் படுத்துகின்றனர். போதிய புரிதல் இல்லாத வயதில் மாணவர்கள் ச‌மூக வலைத்தளங்களை பயன்படுத்து வதால், பல்வேறு தீமைகள் ஏற்படுவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின் றன.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சர்வதேச பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் மாணவர் களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வரும் கல்வி ஆண் டில் இருந்து 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகங் கள் மாணவர் சேர்க்கையின் போது புதிய‌ படிவங்களில் பெற்றோர் மற் றும் மாணவர்களிடம் கையெழுத்து பெறுகின்றன. பள்ளிகளில் சைபர் குற்றங்களை தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவரும் ஆசிரியரும் நண்பர்களா?

இது தொடர்பாக கோபாலன் சர்வதேச பள்ளி தாளாளர் மது நாராயணனிடம் பேசியபோது, “எங் களது பள்ளியில் மாணவர்கள் செல் போன் பயன்படுத்தவும், பேஸ்புக் பயன்படுத்தவும் முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக நேரத்தை பேஸ்புக், வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்காக செலவிடுவதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

வகுப்பறைக்குள்ளும், வகுப் பறைக்கு வெளியேயும் எப்போதும் எதையாவது செல்போனில் நோண் டிக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலும் மாணவர்களின் கவனம் முழுவதும் பேஸ்புக்கில் பதிவிடுவதிலேயே இருக்கிறது. சமூக வலைத் தளங்களில் நல்லதைவிட கெட்டவை அதிகமாக தென்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது மட்டுமல்லாமல் பேஸ்புக்கில் மாணவர்கள் பலர் ஆசிரியர்களுக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இதனால் கண்ணியத்திற்குரிய ஆசிரியர் மாணவர் உறவு கேள்விக் குறி ஆகிவிடுகிறது. பல நேரங்களில் தங்களை கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் பேஸ்புக் மூலம் குறுக்கு வழிகளில் பழிவாங்க முற்படுகிறார்கள். மிக சிறிய வயதில் மாணவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் பள்ளியிலும், வீடுகளிலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீறி பேஸ்புக் பயன்படுத்துவோரை கண்காணிக்க கணினி பிரிவு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியரை நியமித்துள்ளோம். மாணவர்கள் பேஸ்புக்கில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ, ஆசிரி யர்களுடன் நண்பர்களாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டாலோ கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம்''என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்