ஆந்திர பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நோட்டீஸ்

By என்.மகேஷ் குமார்

ஆந்திர பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பட்ஜெட் குறித்து தனது விவாதத்தை தொடங்கினார். பின்னர் சிறிது நேரத்தில், மற்ற உறுப்பினர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டுமென கூறி, பேச்சை முடித்து கொள்ளுமாறு ஜெகன் மோகன் ரெட்டிக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.

இருப்பினும் அவர் தொடர்ந்து பேசியதால், அவரது ‘மைக்’ அணைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு, காகிதங்களைக் கிழித்தெறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவை 10 நிமிடங் களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை தொடங்கியதும் 8 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக் களை 3 நாட்கள் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அந்த எம்எல்ஏக் கள் பாதுகாவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். அக்கட்சி யின் மற்ற எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், பேரவைத் தலைவர் எதிர்க்கட்சியினரைப் பேசவிடாமல் தடுக்கிறார். தேவை யில்லாமல் அவையிலிருந்து வெளியேற்றுகிறார் எனக் கூறி ஜெகன் மோகன் ரெட்டி தலைமை யில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மனிடம் புகார் அளித்தனர். மேலும் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி அவையின் செயலாளர் சத்யநாராயணாவிடம் நோட்டீஸ் வழங்கினர்.

இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்கள் கூறும்போது, “பட்ஜெட் கூட்டத்தொடர் 40 நாட்களாவது நடக்க வேண்டும் ஆனால், ஆளும் கட்சியினர் மக்கள் பிரச்சினைகளைப் பேச விடாமல் 17 நாட்கள் மட்டுமே கூட்டத் தொடரை நடத்துவது கண்டிக்கத்தக்கது. பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கும் வரை அவையைப் புறக்கணிக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்