வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் படம்: டம்மி வேட்பாளர்களை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

வரும் மே 1-ம் தேதி முதல் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் அல்லது வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துடன் வேட்பாளரின் புகைப் படமும் இடம்பெறவேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் தாட்கரே 2,100 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் தார். இதே பெயரில் நிறுத்தப்பட்ட மற்றொரு வேட்பாளர் இத் தேர்தலில் 9,500 வாக்குகள் பெற்றார். எனவே டம்மி வேட்பாளர் மூலம் தேசியவாத காங்கிரஸ் தலைவரின் வெற்றிவாய்ப்பு பறிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

எனவே வாக்காளர்களை குழப்புவதற்காக டம்மி வேட்பாளர் கள் நிறுத்தப்படுவதை தடுக்க வாக்குப்பதிவு இயந்திரங்கள் அல்லது வாக்குச்சீட்டில் வேட் பாளர்களின் புகைப்படம் இடம் பெறச் செய்ய தேர்தல் ஆணை யம் முடிவு செய்தது. இதற்கான உத்தரவை இதன் முதன்மை செயலாளர் கே.எப்.வில்ஃபிரட் கடந்த 16-ம் தேதி வெளியிட்டார்.

சுனில் தாட்கரே போன்றவர் களுக்கு இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும் இது மிக வும் வரவேற்கப்படுகிறது. டம்மி வேட்பாளர்களை நிறுத்தும் முறை கேடு மகாராஷ்டிரத்தில் மட்டு மல்ல நாடு முழுவதும் உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத் தின் உத்தரவு குறித்து மும்பை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் அருணா பெண்ட்ஸி கூறும்போது, “வலுவான வேட்பாளர்களை தோற் கடிக்க எதிரணியினர் குறுக்கு வழி களை கையாளுகின்றனர். அவற் றில் டம்மி வேட்பாளரை நிறுத்து வதும் ஒன்று. எனவே தேர்தல் ஆணையம் சிறந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் ஜனநாயகம் வலுப்படும்” என்றார்.

முதல் மாநிலம் பிஹார்

தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவின்படி தேர்தலை சந்திக்கும் முதல் மாநிலமாக பிஹார் உள்ளது. இம்மாநிலத்தில் நிதிஷ்குமார் அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிகிறது. இந் நிலையில் இம்மாநிலத்தில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப் புள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங் கள் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கின்றன.

உத்தரவின் முக்கிய அம்சங்கள்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வேட்பாளரின் புகைப்படம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அல்லது வாக்குச்சீட்டில், வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு இடையே இடம்பெறும்.

இந்தப் புகைப்படம் 2 செ.மீ. அகலம், 2.5 செ.மீ. உயரம் கொண்ட தாக இருக்கும். இதற்காக வேட் பாளர்கள் தங்களின் சமீபத்திய (3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட) பாஸ்போர்ட் சைஸ் புகைப் படத்தை வேட்பு மனுவுடன் அளிக்கவேண்டும்.

என்றாலும் வேட்பாளர்கள் புகைப்படம் தருவது கட்டாய மில்லை. இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படாது. புகைப் படம் தராதவர்களுக்கு அவர்களின் பெயர் மற்றும் சின்னம் மட்டுமே இடம்பெறும். இந்த உத்தரவு வரும் மே 1-ம் தேதி முதல் அனைத்து தேர்தல்களுக்கும் பொருந்தும்.

கருப்புப் பணத்தை தடுக்க தேர்தல் ஆணையர் வலியுறுத்தல்

அரசியல், நிதி மற்றும் சட்ட ஆணையத்தின் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரை மீதான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ். பிரம்மா கூறியதாவது:

கருப்புப் பணம், பணபலம், ஆள் பலம் ஆகியவை தேர்தல் நடவடிக்கைகளில் சமத்துவமற்ற தன்மையை உருவாக்குகின்றன. இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

கருப்புப் பணம் ஜனநாயகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பணம் வாக்குகளுக்கு உத்தரவாதமல்ல என்ற போதும், யார் அதிகம் செலவு செய்கிறார்களோ அவர்களின் கை ஓங்கியிருக்கிறது. ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் ரூ. 15 கோடி செலவு செய்கின்றனர். இந்தப்பணம் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் பணபலத்தைப் பயன்படுத்துவதை ஒடுக்க வேண்டும். பணபலம் மிக மோசமானது எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் கணவன் மனைவி போல மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அங்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தேர்தல் நடைமுறையை சுத்தப்படுத்துவதான் நோக்கம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்