இணையதள கருத்து சுதந்திரத்துக்காக போராடி வெற்றிவாகை சூடிய ஷ்ரேயா சிங்கால்

By செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் வெளியிடப் படும் விமர்சனங்கள், கருத்துகளை குற்றமாகக் கருதும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66ஏ சட்ட விரோதமானது எனக் கூறி, அதை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. | விரிவான செய்தி ->சமூக வலைதள விமர்சனத்தை தடுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு |

இணையதள கருத்து சுதந்திரத்துக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஷ்ரேயா சிங்கால் சாதகமான தீர்ப்பைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 2012-ம் ஆண்டில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவின்போது மும்பை முடங்கியது. இதுகுறித்து பேஸ் புக்கில் கருத்து தெரிவித்த பெண்ணும், அதை ஆமோதித்த அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் எனது மனதை பாதித்தது.

அப்போது நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண் டிருந்தேன். இணையதள கருத்துத் சுதந்திரத்தை மீட்க உறுதிபூண்டேன். 66 ஏ பிரிவு மத்திய, மாநில அரசுகளால் தவறாக பயன்படுத்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.

எனவே மக்களுக்காக நானே களம் இறங்க முடிவு செய்தேன். நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இப்போது மிகப்பெரிய வெற்றிகிடைத் துள்ளது. மக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஷ்ரேயாவின் தாயார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். அவரது பாட்டி நீதிபதியாக பணியாற்றியவர் ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்