உ.பி. தேர்தலில் போட்டியிட ஒவைஸி திட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 2017-ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் போட்டியிட அசாதுதீன் ஒவைஸியின் மஜ்லீஸ்-இ-இத்தா ஹதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆயத்தமாக வரும் 15-ம் தேதி அலகாபாத்திலும், 29-ம் தேதி ஆக்ராவிலும் கட்சி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், ஒவைஸி பங்கேற்கிறார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஒவைஸி கட்சியின் ஆக்ரா மாவட்ட அமைப்பாளர் முகம்மதி இதிரீஸ் அலி கூறும்போது, ”உபியில் நடைபெறவிருக்கும் முதல் கூட்டத்தில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஒவைஸி வெளியிடுவார். இங்கு சுமார் 100 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர்” என்றார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சி, அம்மாநிலத்துக்கு வெளியே முதன்முறையாக மகாராஷ்டிர தேர்தலில் போட்டியிட்டது. அதில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர், டெல்லி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டனர். ஆனால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடும் என்பதால் கடைசி நேரத்தில் பின்வாங்கினர். தற்போது, முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

22 mins ago

க்ரைம்

29 mins ago

வணிகம்

33 mins ago

சினிமா

30 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

52 mins ago

வணிகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்