கேஜ்ரிவாலுக்கு நிர்வாக திறன் போதாது: கிரண் பேடி

By செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நிர்வாகத் திறன் போதாது என டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடைசிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக 40 ஆண்டு கால நிர்வாக அனுபவம் எனக்கு உள்ளது ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் தனது ஐ.ஆர்.எஸ். வேலையையும் முழுமையாக செய்யவில்லை. 5 ஆண்டுகள் மட்டுமே அதிகாரியாக இருந்தார். பின்னர் டெல்லி முதல்வரானார். அந்தப் பதவியையும் பாதியிலேயே துறந்தார். மீண்டும் அவரை தேர்ந்தெடுத்தால், மீண்டும் ஓடிப்போவார். மக்கள் நம்பிக்கையை வீணடித்துவிடுவார். கேஜ்ரிவாலுக்கு நிர்வாகத் திறன் போதாது. என்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன்" இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10-ம் தேதி நடைபெறுகிறது.

பாரதிய ஜனதாகட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே இருமுனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. தொடர்ந்து 3 முறை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலிலும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை காணப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்