ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு ஹெல்ப் லைன் அறிமுகம்

By செய்திப்பிரிவு

பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா புதிய ஹெல்ப்லைன் சேவை அறிமுகப்படுத்துவதாக, ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

2015 - 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.

ஹெல்ப்லைன் 182

அமைச்சர் சுரேஷ் பாபு தனது ரயில்வே பட்ஜெட் உரையில், "பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா ஹெல்ப்லைன் சேவை எண் '182' அறிமுகப்படுத்தப்படுகிறது.

உதவி எண் 138

அதேவேளையில், ரயில்வே உதவி எண் '138', அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயக்கப்படும்" என்றார் அவர்.

மேலும், "ரயில்வே இருப்புப் பாதை தூரம் 20 % அதிகரிக்கப்படும். தூய்மையான, சுகாதாரமான குடிநீர் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

ரயில் நிலையம், ரயில் தூய்மையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும். ரயில் நிலையங்களின் தூய்மையை கண்காணிக்கவும் மேம்படுத்தவும் தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்" என்றார் அமைச்சர் சுரேஷ் பிரபு.

படிக்க ->ரயில்வே பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

16 mins ago

சினிமா

21 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்