நிதிஷ் தலைமையில் 130 எம்எல்ஏக்கள்: குடியரசுத் தலைவர் முன்பு அணிவகுப்பு

By செய்திப்பிரிவு

ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ்குமார் தன்னை ஆத ரிக்கும் 130 எம்.எல்.ஏ.க்களை குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நேற்று மாலை அணிவகுக்கச் செய்தார்.

ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நிதிஷுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றனர். சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது:

பிஹாரில் எனது தலைமையில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் பான்மை உள்ளது. அதனை குடியரசுத் தலைவர் முன்பு நிரூ பித்துள்ளேன். ஏற்கெனவே பிஹார் ஆளுநர் மாளிகையிலும் எங்களது பெரும்பான்மையை நிரூபித்துள் ளோம். இந்த விவகாரத்தில் மாநில ஆளுநர் முடிவெடுக்க காலதாமதம் செய்கிறார். இது குதிரை பேரத் துக்கு வழிவகுக்கும். பிஹார் அரசியல் நிலவரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடி யரசுத் தலைவரை கேட்டுக் கொண் டுள்ளோம்.

பிஹாரில் நிலவும் அரசியல் குழப்பத்தால் மக்கள்தான் பாதிக்கப் படுவார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது, சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்த கோருவதில் முடிவு எடுக்க ஏன் இவ்வளவு காலதாமதம் செய்ய வேண்டும் என்பது தெரிய வில்லை. மாஞ்சியின் மூலம் பாஜக ரகசியமாக காய் நகர்த்தி வருகிறது. இதனை அனுமதிக்க முடியாது. சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மாஞ்சி கோரு கிறார். அரசியல் சாசன விதிகளின் படி பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்