தர்ணா செய்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்: டெல்லியில் மோடி தேர்தல் பிரசாரம்

By பிடிஐ

தர்ணாவில் விருப்பமுள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், இங்கு வளர்ச்சி வேண்டும் எனில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லி துவாரகா பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் திரைக்குப் பின்னால் கைகளைக் குலுக்கிக் கொண்டார்கள்.

ஆனால் தற்போதோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நாளில் இருந்து, இரண்டு கட்சி களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். அதன் மூலம் தங்களின் செய்தி களுக்கு ஊடகங்களில் இடம் கிடைக்கும் என்று நினைக் கிறார்கள்.

டெல்லியில் உள்ள பிரச்சினை களை அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அணுகும் அரசு தேவை. அது பா.ஜ.க.வால்தான் முடியும். எனவே பா.ஜ.க.வுக்கு வாக்களி யுங்கள். அதைவிட்டு தர்ணா நடத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாக் களிக்காதீர்கள்.

ஊடகங்களில் இடம்பிடிப்பதன் மூலம் அரசை நடத்த முடியாது. மக்களின் இதயங்களில் இடம்பிடித்தால் தான் அரசை நடத்த முடியும். டெல்லியில் பா.ஜ.க.வின் அரசு அமைந்தால், அங்கு உள்ள முதல்வருக்கு என் மீது அச்சம் இருக்கும். அதனால் அவரால் நன்கு செயல்பட முடியும். ஆனால் தனக்கு மேலே யாரும் இல்லை என்ற தைரியம் கொண்டுள்ள‌ ஒருவர் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டால், அவரால் அழிவை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

கடந்த ஓராண்டில் டெல்லியில் ஏற்பட்டிருக்க வேண்டிய வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் டெல்லி தற்போது 25 ஆண்டுகள் பின் தங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

சினிமா

53 mins ago

வலைஞர் பக்கம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்