டெல்லியில் கடந்த முறையை போல முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: மன்னிப்பு கேட்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

By பிடிஐ

‘‘கடந்த முறையை போல இந்த முறை திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை பலத்தைக் கொடுங்கள்’’ என்று அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அப்போது முதல் முறை யாக தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. 70 இடங்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் காங் கிரஸின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வ ராக கேஜ்ரிவால் பதவி ஏற்றார். ஆனால், லோக்பால் சட்டம், மின் சார கட்டண குறைப்பு போன்றவற் றில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ராஜினாமா செய்தார்.

டெல்லியில் பதவியேற்று 49 நாட்களில் அவர் பதவியை ராஜி னாமா செய்தது ஆம் ஆத்மி கட்சி யினர் மட்டுமின்றி அரசியல் கட்சி யினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் டெல்லியில் மீண் டும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் நிலை யில், என்டிடிவி இணையதளத்தில் கேஜ்ரிவால் கூறியிருப்பதாவது:

கடந்த முறை நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், டெல்லி மக்கள் மனமொடிந்து விட்டனர். இதற்காக டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கடந்தமுறை போல இந்த முறை அவசர முடிவு எடுக்க மாட்டேன். நாங்கள் பொய் சொல்லவில்லை, திருடவில்லை. எனினும் எங்கள் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனினும் நம் எல்லோரையும் விட ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரியது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டி யிட்டேன். அப்போது நான் பிரதம ராக ஆசைப்படுவதாக கூறினர். அது உண்மையில்லை. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே டெல்லியில் மறு தேர் தல் நடத்த வேண்டும் என்று வலி யுறுத்தினேன். ஆனால், தேர்தல் தான் வரவில்லை. எனினும் நாங்கள் ராஜினாமா செய்தது மிகப்பெரிய தவறு என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன்.

டெல்லி மக்கள் அரசியலைத் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். ஆனால், ஆம் ஆத்மி கட்சி வந்த பிறகு ஒரு பெரிய மாற்றத்தை அவர்கள் விரும்பினர். அதற்காக செல்லும் இடங்களில் எல்லாம் ஆம் ஆத்மி பற்றி பேசினர். தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசை கொடுத்தனர். ஆனால், எனது ராஜினாமா அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துவிட்டது. ஆனால், இந்த முறை ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் டெல்லியில் ஆட்சி அமைக்க விரும்புகிறது. இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

5 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

37 secs ago

விளையாட்டு

21 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்