கழிவுகளை மனிதர் அள்ளுவதை தடுக்க ரூ.40,000 நிவாரண உதவி: மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் தகவல்

By பிடிஐ

மனிதர்கள் கைகளால் கழிவுகளை அகற்றும் அவலத்தை முற்றிலும் ஒழிப் பதற்காக, அந்நபரின் குடும்பத்துக்கு ரூ.40,000 நிவாரண உதவி வழங்கப்படும். ஆனால், இதுகுறித்த தகவல்களை ஒரு சில மாநிலங்களே அளித்துள்ளன என மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது:

கழிவுகளை கைகளால் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும் பங்கள் பற்றிய போதுமான தகவல்களை 10 அல்லது 11 மாநிலங்களே அளித்துள்ளன. கைகளால் கழிவுகளை நேரடியாக அள்ளும்பணியில் ஈடுபடுத்துவதை தடுத்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013ன் படி, இந்த மோசமான நடைமுறையை முற்றிலும் ஒழிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.

கைகளால் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவரின் குடும்பத்துக்கு ஒரு முறை நிவாரண உதவியாக ரூ.40,000 அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

வணிகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்