பெங்களூருவுக்குள் நுழைவதற்கு பிரவீண் தொகாடியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

By இரா.வினோத்

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா பெங்களூருவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள‌ பசவனகுடி நேஷனல் கல்லூரியில் நாளை `வீரமிகு இந்து மாநாடு' நடைபெறுகிறது. இதில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் பிரவீண் தொகாடியா பெங்க ளூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது எனக்கூறி, வரும் 11-ம் தேதி வரை அவர் பெங்களூருவுக்குள் நுழைய தடைவிதித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து கர்நாடக மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப் பின் தலைவர் கேசவ் ஹெக்டே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை நேற்று விசா ரித்த நீதிபதி எஸ்.அப்துல் நசீர் அகமது,”சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட அரசும் நிர்வாகமும் சில நடவடிக்கையை எடுக்கலாம். அந்த அதிகாரத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது” என உத்தரவிட்டார்.

சாலை மறியல்

கர்நாடக உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் பிரவீண் தொகாடியா பெங்களூருவுக்கு வருவது கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்துள்ள இந்துத்துவா அமைப்புகள் போராட் டங்களுக்கு அழைப்பு விடுத் துள்ள‌ன.

இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூரு, விஜயப்புரா, கொள்ளே கால் உள்ளிட்ட இடங்களில் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட அமைப்பு களை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாம்ராஜ் நகரில் நடைபெற்ற சாலை மறிய லால் பெங்களூரு-கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் ஷெட்டர், “காவல்துறையின் இப் போக்கை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்துவோம்''என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

3 hours ago

மேலும்