அரசிடம் அளித்த ரூ.1.63 கோடியை திரும்ப பெற மோகன்லால் மறுப்பு

By செய்திப்பிரிவு

கேரள தலைநகர் திருவனந்த புரத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடக்க விழா கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. அப்போது நடிகர் மோகன்லாலின் இசைக் குழு பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியது.

மேடையில் பாடகர்கள் பாடாமல் பதிவு செய்யப்பட்ட பாடல்களுக்கு வாய் அசைத்த தாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வழங்கப்பட்ட ரூ.1.63 கோடியை கேரள அரசிடம் மோகன்லால் திருப்பி அளித்தார். முதல்வர் உம்மன்சாண்டி நேரில் சந்தித்து வலியுறுத்தியும் பணத்தை திரும்ப பெற அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மோகன்லால் திருப்பி அளித்த ரூ.1.63 கோடியை கேரள விளையாட்டுத் துறை அமைச்சகம் தனியாக டெபாசிட் செய்துள்ளது. இந்தத் தொகை மோகன்லாலின் விருப்பப்படி பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு செலவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்