சீக்கியர் கலவரம் குறித்து மறுவிசாரணை: மத்திய அரசு முடிவு

By செய்திப்பிரிவு

1984 சீக்கியர் கலவரம் தொடர்பாக விரைவில் மறுவிசாரணை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31-ம் தேதி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீக்கியர்களை குறிவைத்து பெரும் கலவரம் வெடித்தது. இதில் 3325 பேர் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2733 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு சீக்கியர் கலவர வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த டிசம்பரில் நீதிபதி ஜி.பி. மாத்தூர் கமிட்டி அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்க கமிட்டிக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. எனினும் 45 நாள்களில் மாத்தூர் கமிட்டி மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில் 225 சம்பவங்களில் மறுவிசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதன்படி கலவரம் குறித்து மறுவிசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் எதிர்ப்பு

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகின்றன. தற்போது டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறுவதால் சீக்கியர் கலவரம் குறித்து அரசுக்கு திடீரென அக்கறை வந்துவிட்டது. இதுதொடர் பாக மறுவிசாரணை நடத்தப்போவதாக கூறுகின்றனர். இதேபோல் குஜராத் கலவரம், முஷாபர்நகர் கலவரம், மங்கோல்புரி கலவரம் குறித்து மறுவிசாரணை நடத்தாதது ஏன்?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பூல்கா கூறியபோது, மத்திய அரசின் நடவடிக்கை அரசியல் சித்து விளையாட்டு என்று தெரிவித்தார்.

அகாலி தளம் வரவேற்பு

மத்திய அரசின் நடவடிக்கையை அகாலி தளம் கட்சி வரவேற் றுள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் கூறியதாவது: சீக்கியர் கலவரம் குறித்து மறுவிசாரணை நடத்த மாத்தூர் கமிட்டி பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார், ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்

டோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கலவரத்தில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வில்லை, முழுமையான நிவாரணம் கிடைக்க வில்லை. மாத்தூர் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று உடனடியாக விசார ணையை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

17 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்