கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு: சுனில் மிட்டல், ரவி ரூயாவுக்கு எதிரான சம்மன் ரத்து - உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் பார்தி செல்லுலார் நிறுவன தலைவர் சுனில் பார்தி மிட்டல் மற்றும் எஸ்ஸார் குழும நிறுவனர் ரவி ரூயா ஆகியோருக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த சம்மன்களை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

கடந்த 2002-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சியின்போது செல்போன் நிறுவனங்களுக்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதால் அரசுக்கு ரூ.846 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி, முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செய லாளர் ஷ்யாமல் கோஷ் மற்றும் பார்தி செல்லுலார், ஹட்சிசன் மேக்ஸ் டெலிகாம் (இப்போதைய வோடோபோன்) மற்றும் ஸ்டெர்லிங் செல்லுலார் (இப்போது வோடபோன் மொபைல் சர்வீஸ்) ஆகிய நிறு வனங்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேரில் ஆஜ ராகுமாறு 2013, மார்ச் 19-ம் தேதி சுனில் பார்தி மிட்டல், ரவி ரூயா, அசிம் கோஷ் ஆகியோருக்கு சிபிஐ நீதிபதி சம்மன் அனுப்பினார். மிட்டல், ரூயா ஆகியோர் 2013, ஏப்ரல் 1-ம் தேதி சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஏப்ரல் 26-ம் தேதி சம் மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடை பெற்றது.

இந்த விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முடிந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதில், “இந்த வழக்கில் சட்ட நெறிமுறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், சிறப்பு நீதிமன்றம் மிட்டல், ரூயா ஆகியோருக்கு அனுப்பிய சம்மன் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம் இந்த வழக்கு தொடர் பாக இனி வரும் காலத்தில் இவர் களுக்கு எதிரான ஆதாரம் ஏதேனும் கிடைத்தால் விசா ரணைக்கு அழைக்க சிறப்பு நீதிபதிக்கு உரிமை உள்ளது” என கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்