ஜம்முவில் நவ்ஜோத் சிங் சித்து சென்ற வாகனம் மீது தாக்குதல்: ஓட்டுநர் காயம்

By பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருவதையடுத்து போர் (Bhor) முகாம் பகுதியில் பாஜக தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

பாஜக வேட்பாளர் கவிந்தர் குப்தாவை ஆதரித்து நவ்ஜோத் சித்து போர் முகாம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் வந்த கார்கள் மீது ஒரு கும்பல் சரமாரியாக செங்கற்கள் உட்பட பெரிய பெரிய கற்களால் தாக்குதல் நடத்தியது. இதில் வாகன ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நவ்ஜோத் சித்து காயமடையாமல் தப்பினார்.

இஸ்லாம் மதத்தின் புனித நூலான குரானைப் பற்றி நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்த கருத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனம் கடுமையாக சேதமடைந்தது. ஓட்டுநர் பிரவீண் சிங் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே தொகுதியில் சித்து மீது நடத்தப்படும் 2-வது தாக்குதலாகும் இது.

சித்துவின் மீதான இந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக சாடியுள்ளது. ஏற்கெனவே திகியானா பகுதியிலும் நவ்ஜோத் சிங் சித்து மீது கல்வீச்சு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

10 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

8 mins ago

சினிமா

26 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

20 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

34 mins ago

வலைஞர் பக்கம்

38 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

48 mins ago

மேலும்